தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதிவிகளுக்கு கல்வித்தகுதி நிர்ணயித்து ஊரக வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இளநிலை உதவியாளர், உதவியாளர், நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கும் அவற்றுக்கான பதவி உயர்வுக்கும் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவ தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி வாயிலாக நேரடியாக நிரப்பப்படும் இளநிலை உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச பொது கல்வித்தகுதி (எஸ்எஸ்எல்சி தேர்ச்சி) அவசியம். பதிவுறு எழுத்தர் நிலையில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு தினமும் இரண்டரை மணி நேரம் இளநிலை உதவியாளர் வேலையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், இந்த தகுதி, அலுவலக உதவியாளர் நிலையில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெறுவதற்கும் பொருந்தும்