சென்னை: துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் எப்படி? – பின்னணியில் காளை மாடு ஒன்று ஆக்ரோஷமான பார்வையுடன் இருக்க அதற்கு முன்னால் துருவ் விக்ரம் நிற்கிறார். வழக்கமான மாரி செல்வராஜ் படங்களை போலவே இப்படமும் மிகவும் சீரியஸ்தன்மை கொண்ட கதைக்களம் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.