சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ள பெ.சண்முகம், விவசாயிகளின் உரிமைகளை மீட்க தொடர்ச்சியாகப் போராடி வருபவர். இண்டியா கூட்டணியின் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் செயல்படவல்ல ஒரு சிறந்த தோழருக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வாகியுள்ள பெ. சண்முகத்தின் பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.