* பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற டிப்ஸ்
வேலூர்: பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் வரும் மார்ச் 1ம் தேதி தினகரன்- விஐடி இணைந்து வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள் இலவச அனுமதியுடன் பங்கேற்று பயன்பெறலாம். தினகரன் நாளிதழும் வேலூர் விஐடியும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும், பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் முயற்சியில் கல்வி தொடர்பாக ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை பிடித்ததுடன் தங்கள் வாழ்வில் தடம் பதித்து வருகின்றனர்.
தற்போது பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடும், கனவுகளோடும் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு வழிகாட்டும் கல்வி நிகழ்ச்சி ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் வேலூர் தினகரன் நாளிதழும், வேலூர் விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து `வெற்றி நமதே’ நிகழ்ச்சியை வேலூர் விஐடி பல்கலைக்கழகம் அண்ணா அரங்கில் வரும் மார்ச் 1ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமின்றி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமின்றி தங்கள் பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கெடுக்கும் பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? அச்சமின்றி குறித்த நேரத்தில் தேர்வுக்கான விடைகளை எழுவது எப்படி? எந்த கேள்விக்கு எந்த மாதிரியான பதில்கள் அளித்தால் முழு மதிப்பெண் பெறலாம். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எந்த துறையில் உயர்கல்வி படித்தால் வேலைவாய்ப்பும், எதிர்காலத்தில் நல்ல சம்பளமும் கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை வழங்குகின்றனர். அதோடு மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் தேர்வுகளை எளிதாக அனுக இந்த வெற்றி நமதே நிகழ்ச்சி மிகவும் உதவியாக இருக்கும்.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் லட்சியப்பாதைக்கு படிக்கற்களாய் இருக்கும் என்பது நிச்சயம். ஆகவே பொதுதேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், தேர்வை எளிதில் எதிர்கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறவும், உயர்கல்வி கனவை, நனவாக்கி தங்களின் சிறந்த எதிர்காலத்திற்கு துணை நிற்கும் இந்நிகழ்ச்சியை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அருமையான இவ்வாய்ப்பை மாணவர்களும், பிள்ளைகளின் எதிர்கால கனவுகளையும் சேர்த்து சுமக்கும் பெற்றோர்களும் தவறாமல் பயன்படுத்தி, பயனடைய வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை வேலூர் தினகரன், விஐடி பல்கலைக்கழகம் இணைந்து செய்து வருகிறது. ரேடியோ பார்ட்னராக சூரியன் எப்எம் 93.9 உள்ளது.
The post மார்ச் 1ம் தேதி நடக்கிறது; தினகரன்-விஐடி இணைந்து ‘வெற்றி நமதே’ கல்வி நிகழ்ச்சி: மாணவர்கள், பெற்றோர்களுக்கு அனுமதி இலவசம் appeared first on Dinakaran.