சென்னை: வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை – இலங்கை பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ம் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.