சென்னை: மத்திய அரசின் இந்திய செயற்கை கால்கள் உற்பத்தி நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கும் ஏடிஐபி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கும் அளவீட்டு முகாம் சென்னையில் வரும் 25-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதன்படி இன்று (மார்ச் 21) அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முகாம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து திருவொற்றியூர் மண்டலத்தில் புழல் போபிலி ராஜா பள்ளியில் நாளையும், 24-ம்தேதி திருவிக நகர், பல்லவன்சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், 25-ம் தேதி கொருக்குப்பேட்டை ரயில்வே நிலையம் அருகே மீனாம்பாள் நகரிலும் முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறும்.