மாவட்டங்கள் பிரிப்பு, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம், ஒதுக்கி வைத்திருந்தவர்களுக்கு திடீர் பதவி என தேர்தலை நோக்கி திமுக விறுவிறுப்பாக பயணப்படுவதாக வெளிப்பார்வைக்குத் தெரிகிறது. ஆனால், உண்மையில் இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பது தவெக மீதான அச்சமே என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தவெக-வுக்கு 20 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது என பிரசாந்த் கிஷோர் சொன்னாலும் சொன்னார்… அனைத்துக் கட்சிகளிலும் இருந்து தவெக-வின் எதிர்காலம் குறித்தான விசாரணைகள் தொடங்கிவிட்டன. ஆளும் கட்சியான திமுக தரப்பிலிருந்தும் இந்த விசாரணைகளுக்கு குறைவில்லை.