புதுடெல்லி: மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட (most-affected) மாவட்டங்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை மார்ச் 31, 2026-க்குள் முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதை நோக்கிய அரசின் செயல்பாடுகள், வெற்றிகரமாக உள்ளன. மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 12-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.