புதுடெல்லி: மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இந்த தீபாவளி மிகவும் சிறப்பானதாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உற்சாகம் நிறைந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி. பகவான் ஸ்ரீ ராமர், நீதியை நிலைநிறுத்தக் கற்றுக் கொடுக்கிறார், அநீதியை எதிர்த்துப் போராட தைரியத்தைத் தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஆபரேஷன் சிந்தூர் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஆபரேஷன் சிந்தூரின்போது நமது நாடு நீதியை நிலைநாட்டியது. அது மட்டுமல்லாமல், அநீதியை பழிவாங்கியது.