
ஆக்லாந்து: நியூஸிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசினார். ரோவ்மன் பவல் 33, ராஸ்டன் சேஸ் 28, அலிக் அதானஸ் 16 ரன்கள் சேர்த்தனர்.

