திருச்சி: திருச்சி பிராட்டியூர் பகுதியில் தேவாலய அமைப்புக்கு சொந்தமான இடத்தில் புதிதாக ‘‘தகரஷெட்’’ அமைக்கும் பணி நடந்தது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த கோபி (34), பாக்கியராஜ் (21), சிவக்குமார் (40), நடராஜன் ஆகியோர் ஈடுபட்டனர். நேற்று மாலை 4 மணியளவில் மாடியிலுள்ள தகரஷெட் போடுவதற்காக 25 அடி உயர இரும்பு லேடர் ஒன்றை தள்ளிக்கொண்டு சென்றனர். அப்போது மேலே சென்ற மின்வயர் மீது லேடர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து,கோபி, பாக்கியராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.
The post மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.