‘‘கிக் ஒர்க்கர்ஸ்" என்று அழைக்கப்படும் டெலிவரி ஊழியர்கள் ஒரு கோடி பேருக்கு மின்னணு அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ காப்பீடு அளிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா (பிஎம்-ஜேஏஒய்) திட்டத்தின் கீழ் அவர்களுக்கு இந்த மருத்துவ காப்பீட்டு வசதி வழங்கப்பட உள்ளது.
மேலும், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பகல்நேர மருத்துவ மையம் அமைக்கப்படும். முதல்கட்டமாக 2025-26-ம் ஆண்டில் 200 புற்றுநோய் மையங்கள் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.