கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பாலகுறி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி(20). இவர் கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையத்தில், தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்குள்ள கங்கலேரி பக்கமாக சென்றுள்ளார். அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்கு அருகே வனவிலங்குகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில், திருப்பதியின் கை உரசியது. இதில், உடலில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
The post மின்வேலியில் சிக்கி தபால் ஊழியர் பலி appeared first on Dinakaran.