யாங்கூன்: மியான்மரில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சியை விரட்டி விட்டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மத்திய மியான்மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்தினர் ஏராளமானோர் கூடி விழா கொண்டாடினர். அப்போது புத்த மதத்தினர் கூடியிருந்த பகுதிகளில் ராணுவத்தினர் பாராகிளைடர் மூலம் அடுத்தடுத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.