பாங்காக்: மியான்மரில் 2026ம் ஆண்டுக்குள் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் 83% வாக்குகளுடன் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனால் இதில் முறைகேடு நடந்ததாக கூறி 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, மியான்மரில் உள்ள பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுவினர் நாட்டை தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
பல்வேறு இடங்களில் ஆயுதம் ஏந்திய குழுவினர் ஆதிக்கம் செலுத்தி வருவதால் நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் வாழ வழியில்லாததால் அந்த நாட்டை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் மியான்மரில் 2026ம் ஆண்டுக்குள் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட ஏற்கனவே 53 அரசியல் கட்சிகள் பட்டியலை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post மியான்மரில் 2026ம் ஆண்டுக்குள் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தலைவர் தகவல் appeared first on Dinakaran.