புதுடெல்லி: மியான்மர் – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள், 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஐடி துறையில் வேலைகள் வாங்கித் தருவதாக 'ஏஜெண்டுகள்' அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பி சென்று, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் பலர் அந்நாடுகளுக்குச் சென்றனர். பின்னர் அவர்கள், ராணுவ ஆட்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாத மியான்மரின் சட்டவிரோத எல்லைப் பகுதிகளில், சீன குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் சைபர் குற்ற மையங்களுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.