நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ‘சுமோ’ ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சுமோ’. இப்படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருக்கிறது. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஏப்ரல் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை கண்டிப்பாக வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.