வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிக்கவிருப்பது உறுதியாகிவிட்டது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ என வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி இணைந்த அத்தனை படங்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றவை. தற்போது மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. இப்படத்தினை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார்.