அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் மணிகண்டன், மீண்டும் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
‘குட்நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். தற்போது மீண்டும் இயக்குநராக முடிவெடுத்துள்ளார். இப்படத்தை புஷ்கர் – காயத்ரி தயாரிக்கவுள்ளனர். இதனை சமீபத்திய விழாவொன்றில் தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்தில் மணிகண்டனே நடித்து, இயக்க முடிவெடுத்துள்ளார்.