தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைந்தன. கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ள அதேசமயம், சாய்ஸ் ஃபில்லிங் கலந்தாய்வு முறை குறித்த விமர்சனமும் எழுந்துள்ளது.