புதுடெல்லி: விண்வெளி ஆய்வை முடித்துக்கொண்டு பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்களை பூமி மிஸ் செய்தது என நெகிழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மீண்டும் வருக Crew9! பூமி உங்களை மிஸ் செய்தது. அவர்களின் மனஉறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மைக்கு ஒரு சோதனை இருந்து வருகிறது. சுனிதா வில்லியம்ஸும் #Crew9 விண்வெளி வீரர்களும் உண்மையில் விடாமுயற்சி என்றால் என்ன என்பதை நமக்கு மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளனர். அறியப்படாத பரந்த உலகில் அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு என்றென்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும்.