*ஜூன் 15க்காக இப்போதே தயாராகும் மீனவர்கள்
தரங்கம்பாடி : மீன்பிடி தடைக்காலம் என்பதால், மீனவர்கள் படகு பராமரிப்பு, மீன் வலை பின்னும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடை காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு அண்டம் எப்ரல், மே மாதங்களில் மீன் பிடி தடைகாகலம் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இந்த தடைகாலமானது 61 நாட்கள் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தடைக்காலமானது ஜூன் மாதம் 14ம் தேதி வரை அமுலில் இருக்கும். இதன் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்ட பகுதிடிகளில் சுமார் 6700 விசைப்படகில் மீன் பிடிக்கும் மீனவர்கள் வேலை இழந்து உள்ளனர்.
இந்த தடை காலத்தில் மீனவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கி வந்த ரூ.5 ஆயிரம் தற்போது ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையே தடைக்காலம் காரணமாக மீனவர்கள் இந்த தொழிலை விட்டு செல்லாமல் பாதுகாக்கிறது. எனவே இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் படகுகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ளுதல், வலை பின்னுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களான அக்கரைப்பேட்டை, கிச்சாங்குப்பம், நம்பியார்நகர், நாகூர், சிருதூர், வேளாங்கண்ணி, விழுந்தமாவடி, புஷ்பவனம், கோடியக்கரை, வேதாரண்யம், ஆற்காடுதுறை ஆகிய கிராமங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பூம்புகார், பழையார் உள்ளிட்ட மீன்பிடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இந்த ஓய்வு நாட்களை தங்கள் தொழிலுக்கு தேவையான உபகரணங்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தலைமை மீனவ கிராமமாக தரங்கம்பாடி உள்ளது. இந்த கடலோர பகுதியில் தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன. அந்த மீனவ கிராமங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடி தொழிலுக்கு 100க்கும் மேற்பட்ட விசை படகுகளையும், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஓய்வு காலத்தில் படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளில் மீனவர்கள் ஜூன் 12ம் தேதி வரை தொடர்ந்து ஈடுபட்டு வருவர். அதன் பின்னர் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு தடை நீக்கப்பட்ட பின்னர், மீண்டும் உற்சாகமாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்வார்கள்.
The post மீன்பிடி தடைக்காலத்தை பயனுள்ளதாக்க படகு பராமரிப்பு, மீன்பிடி வலை பின்னும் பணி தீவிரம் appeared first on Dinakaran.