சென்னை: முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட தான்யா குடும்பத்துக்கு புதிய வீட்டுக்கான சாவி, மாற்றுத் திறனாளியான அனுசுயாவுக்கு தானியங்கி சக்கர நாற்காலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோரை ஊராட்சி வீராபுரம் பகுதியைச் சார்ந்த சவுபாக்யா மற்றும் ஸ்டீபன் ஆகியோரின் மகளான தான்யா முகச்சிதைவு நோயால் அவதிப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தனது நிலை குறித்து குறுஞ்செய்தி மூலம் தெரிவித்தார்.