அண்ணாநகர்: வரும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் இன்று கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் பூக்கள் வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் சில்லறை வியாபாரிகள் சொந்த ஊர்களுக்கு சென்றதாலும் மார்க்கெட்டுக்கு வருகை குறைந்ததாலும் பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதாலும் சொந்த ஊர்களுக்கு சென்ற சில்லறை வியாபாரிகளில் பலர் சென்னை திரும்பியதாலும் இன்று காலை கோயம்பேடு பூமார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந் துள்ளது.
வியாபாரம் விருவிருப்பாக நடந்து வருவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ மல்லி 1,200 ரூபாயிலிருந்து 2,000க்கும், ஐஸ் மல்லி 900லிருந்து 1,700க்கும், முல்லை 900க்கும், ஜாதி மல்லி 500 லிருந்து 700க்கும், கனகாம்பரம் 800லிருந்து 900 ரூபாய்க்கும், அரளி பூ 150லிருந்து 200க்கும், சாமந்திபூ 120க்கும், சம்பங்கி 100 ரூபாயிலிருந்து 120க்கும், பன்னீர் ரோஸ் 60லிருந்து 100க்கும், சாக்லேட் ரோஸ் 120லிருந்து 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.