சென்னை: தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.நடராஜன் பாரதிதாஸ், செயலாளர் கே.செல்லப்பன், பொருளாளர் டி.சரவணன், ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெய்சங்கர், அமைப்புச் செயலாளர் பி.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் கடை வாடகை, மின் கட்டணம் உள்ளிட்டவற்றின் உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் முடிதிருத்துதல் உள்ளிட்டவற்றுக்கான குறைந்தபட்ச கட்டணத்தில் ரூ.10 உயர்த்த முடிவு செய்யப்பட்டது.