சென்னை: முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் அணிந்துவந்த கருப்பு துப்பட்டா அகற்றப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பன்னாட்டு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் வருகை தந்திருந்தனர்.