விரைவில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கத்தையும் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகள் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க இருக்கிறார்.
இதை வைத்தும் இப்போது அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. 2019-ல் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த திமுக தலைவர் ஸ்டாலின், திண்டிவனம் – விழுப்புரம் சாலையில் உள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவுத்தூண்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் போவதாக தகவல் வெளியானது. ஆனால், ஸ்டாலின் அங்கு வரக்கூடாது என பாமகவினர் மல்லுக்கு நின்றதால் ஸ்டாலின் அந்த முயற்சியைக் கைவிட்டார்.