சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் எல்.கே.சுதீஷ் கூறியதாவது: தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுநாள் குருபூஜை டிச.28-ல் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தோம். இதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர் களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.