மதுரை: மதுரையிலிருந்து மேலூர் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு 25 கி.மீ. தூரம் மக்கள் திரண்டு வழிநெடுகிலும் வரவேற்பளித்தனர். மேலூர் அருகே அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து மேலூர் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் சென்னைக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து மேலூர் பகுதியில் நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இதையேற்று நேற்று முதல்வர் மதுரை வந்தார்.