சென்னை: சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 13) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று, அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (மார்ச் 14) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.