செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 59 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினனார். ஜேமி ஸ்மித் 38, ஜேக்கப் பெத்தேல் 23 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ரொமாரியோ ஷெப்பர்டு 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.