ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.186 கோடி வசூல் ஈட்டி வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் காம்போவில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.