மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. மும்பை அணி, இந்த சீசனில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வி கண்ட நிலையில் களமிறங்குகிறது. சொந்த மைதானத்தில் விளையாட இருப்பதால் முதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் அந்த அணி களமிறங்குகிறது. சென்னையில் சிஎஸ்கே, அகமதாபாத்தில் குஜராத் அணியுடன் நடைபெற்ற ஆட்டங்களில் மும்பை அணி தோல்வி கண்டது. இந்த 2 போட்டிகளிலும் மும்பை அணியின் பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை.