புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வில் ஓபிசி இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியது, பார்வைத் திறன் குறைபாடு மற்றும் மூளைத்திறன் குறைபாடு இருப்பதாக பொய்யான தகவலை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது பிப்ரவரி 14-ம் தேதி வரை கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூஜா கேத்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதீஸ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 14-ம் தேதி வரை பூஜா கேத்கர் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அறிக்கை அளிக்க டெல்லி அரசு மற்றும் யுபிஎஸ்சி-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை பிப்ரவரி 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது.