மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை பிகேசி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை – ஜம்மு & காஷ்மீர் அணிகள் மோதின. இதன் முதல் இன்னிங்ஸில் மும்பை 120 ரன்களும், ஜம்மு & காஷ்மீர் 206 ரன்களும் சேர்த்தன. 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 74 ஓவர்களில் 290 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஷர்துதல் தாக்குர் அபாரமாக விளையாடி 135 பந்துகளில், 18 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் விளாசினார். ஜம்மு & காஷ்மீர் அணி தரப்பில் அயுகிப் நபி 4, யுத்விர் சிங் 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
205 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி 49 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷுபம் கஜுரியா 45, விவ்ரந்த் சர்மா 38, அபித் முஸ்தாக் 32 ரன்கள் சேர்த்தனர். ரஞ்சி கோப்பை தொடரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் மும்பை அணியை வீழ்த்தி உள்ளது ஜம்மு & காஷ்மீர் அணி. கடைசியாக 2014-ம் வான்கடே மைதானத்தில் நடைப்றற ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது ஜம்மு & காஷ்மீர் அணி.