மும்பை: மும்பை அணிக்கு மீண்டும் கோப்பையை வென்று தருவதே எங்களது இலக்காக உள்ளது என்று அந்த அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா தெரிவித்தார். இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளைப் பெற்றுள்ளது. வரும் 4-ம் தேதி மும்பை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
இந்நிலையில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்தில் நான் நடுவரிசையில் களமிறங்கி விளையாடினேன். இப்போது, தொடக்க வீரராக இருக்கிறேன். முதலில் நான் கேப்டனாக இருந்தேன். இப்போது, கேப்டனாக இல்லை. நாங்கள் கோப்பையை வென்ற சீசன்களில் எங்களது அணி வீரர்களாக இருந்தவர்கள் இப்போது பயிற்சியாளராக உள்ளனர்.