மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் இந்திய பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே.
37 வயதான ரஹானே 201 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் மும்பை அணியில் பேட்ஸ்மேனாக தொடர்வேன் எனவும் ரஹானே தெரிவித்துள்ளார்.