ஹைதராபாத்: ஐபிஎல் லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.