விழுப்புரம்: மும்மொழி கொள்கைக்கு திடமாக எதிர்ப்பு தெரிவிப்பது போல வேளாண் மின் இணைப்புகளில் பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டரை பொறுத்தமுடியாது என தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: கரும்பு 9.5 விழுக்காடு பிழித்திறன் உள்ளவைக்கு கொள்முதல் விலை ரூ.3151 போதாது. டன்னுக்கு கூடுதலாக ரூ.1,000 சேர்த்து வழங்கவேண்டும். உற்பத்தி செலவே டன்னுக்கு ரூ.3200 ஆகிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 2021-ம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் டன்னுக்கு ரூ.4000 வழங்கி இருந்தால் தற்போது ரூ.5000 ஆக உயர்ந்திருக்கும்.