புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க எந்தக் குழு 'மிகவும் பயனுள்ளதாக' இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு அரசும், கேரளா அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று (ஜன. 20) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிப்பதில் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு மிகவும் பயனுள்ளதாக இருக்குமா அல்லது 2021-ஆம் ஆண்டின் புதிய அணை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட ஒரு சட்டப்பூர்வக் குழுவிடம் அந்தப் பணியை வழங்க வேண்டுமா என்பது குறித்து தமிழ்நாடு அரசும், கேரள அரசும் பதிலளிக்க வாய்மொழியாக உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.