கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழக-கர்நாடகா இடையே வழக்கம்போல வாகனப் போக்குவரத்து இருந்தது.
ஏகி கிரண் மராத்திய அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடக மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்குக் கன்னட அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். இப்போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கர்நாடக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இந்நிலையில் கர்நாடகா-தமிழக இடையில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தமிழக எல்லையான ஜூஜூவாடி மற்றும் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இருமாநில போலீஸார் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.