ஷேன் நிகாம், கலையரசன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகம் ஆகும் படம், ‘மெட்ராஸ்காரன்’. இதில் நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கலையரசன், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரித்துள்ளார். சாம் சி. எஸ். இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.