பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஓடிடியில் வெளியாகி பரவலாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் பிரேம்குமாருக்கு நடிகர் சூர்யா வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை பரிசளித்துள்ளார். இதுகுறித்து பிரேம்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மஹிந்திரா தார் எனக்கு எப்போதும் ஒரு கனவு வாகனமாக இருந்தது. நடைமுறை காரணங்களுக்காக நான் 5 கதவுகள் கொண்ட பதிப்பிற்காக காத்திருந்தேன். குறிப்பாக வெள்ளை நிறத்தில் தார் ராக்ஸ் AX 5L 4×4 வேரியண்ட்டை நான் விரும்பினேன். அதன் அறிமுகத்திற்குப் பிறகு, நான் பொருளாதார ரீதியாக அதற்குத் தயாரானதும், காத்திருப்பு காலம் மிகவும் நீடித்தது.