சென்னை: சென்னையில் வறண்ட காற்று காரணமாக வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் முதல் இந்த நிலை நீடிக்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் 35.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1.5 டிகிரி அதிகம். மீனம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இது இயல்பை விட 2.2 டிகிரி அதிகம். தமிழகத்தில் வேலூரில் தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. அங்கு 40.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.அடுத்த மூன்று நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். ஆனால், ஏப்ரல் மாதத்தில் முன் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால் வெப்பம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் மாநகராட்சி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக, போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. வள்ளுவர் கோட்டம் அண்ணாசாலை, திருவான்மியூர் போன்ற முக்கிய பகுதிகளில் இது அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் முதல் முறையாக மெரினா கடற்கரையில் குதிரைகள் வசதிக்காக, தண்ணீர் தொட்டி தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
The post மெரினா கடற்கரையில் குதிரைகளுக்கு தண்ணீர் தொட்டி: மாநகராட்சி ஏற்பாடு appeared first on Dinakaran.