சென்னை: மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன்; காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரையிலும் சென்றிருக்கிறோம். பிரச்னையை நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுதும் பேசிக்கொண்டு தான் இருந்தீர்கள். நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது என்று கூறினார்.
கனிம வளங்கள் கொள்ளையா? – துரைமுருகன் விளக்கம்
அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லவில்லை; சட்டத்திற்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லவில்லை. கனிம வளங்கள் கொள்ளை போகிறது என இனிமேல் யாரும் சொல்ல முடியாது; சிறிய கல் கூட நம்முடைய அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. இதுவரை 21 ஆயிரம் வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
The post “மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்ட முடியாது” – சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.