பிராடிஸ்லாவா: ஸ்லோவாக்கியா நிறுவனங்கள் மேக் இன் இந்தியா திட்டங்களில் இணைய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு போர்ச்சுக்கல் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் ஸ்லோவாக்கியா சென்ற திரவுபதி முர்மு ஸ்லோவாக்கியா – இந்தியா வர்த்தக அமைப்பில் உரையாற்றினார்.