அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தயாரான உடனே இயக்குநர்கள் பலருக்கும் திரையிட்டு காட்டப்பட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பார்த்த இயக்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்த விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர்கள் என அனைவரும் பேசினார்கள். இதில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்துக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் குறிப்பிட்டு நன்றி கூறினார். இறுதியாக “கடைசியாக ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் அகிலா இளங்கோவன். 6-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து உன்னை தெரியும். 10-ம் வகுப்பில் இருவரும் நட்பாக இருக்கிறோம்.