மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 3 நாட்களாக நீர்வரத்து 1000 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 151 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 129 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் 113.54 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 113.24 அடியாக சரிந்தது. நீர்இருப்பு 83.09 டிஎம்சியாக உள்ளது.
The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.24 அடி appeared first on Dinakaran.