மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
தமிழக வனக்கோட்டங்களில் ஆண்டுக்கு ஒரு முறையும், முதுமலை உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கும் முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அதேபோல், ஆண்டுக்கு ஒருமுறை, தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி மே 23 (இன்று) தொடங்கி 25-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.