மேட்டூர்: மேட்டூர் வனப்பகுதியில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகை பறவையினங்களை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர் வனக்கோட்டத்தில், ஈரநிலப்பரப்பு, நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி கடந்த 8, 9, 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக சேலம் வனக்கோட்டத்துக்குட்பட்ட மேட்டூர் வனச்சரகத்தில் பாலமலை, நீதிபுரம், வனவாசி, சோளப்பாடி, பண்ணவாடி, செம்மலை ஏரி ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடந்தது. இப்பணி முடிந்த நிலையில் பறவையினங்கள் பட்டியலை வனத்துறையினர் தயாரித்து வருகின்றனர்.